Nerungi Varum Idiyosai - பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல்
Sethupathi Arunachalam
Narrateur Uma Maheswari
Maison d'édition: itsdiff Entertainment
Synopsis
நெருங்கி வரும் இடியோசை (நாவல்) “நான் ஏழு நாளா ஒன்னுமே சாப்டல. சின்னச் சின்ன மீன், நத்தைங்கள்லாம் பிடிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இப்போ அதெல்லாமும் குறைஞ்சு போச்சு. தாமரைக்குளம் இருக்குல்ல, அதெல்லாம் இப்போ வெறும் சேறும் சகதியுமாய்டுச்சு. சின்னப் பசங்க, பொண்ணுங்க எல்லாம் கழுத்தளவு தண்ணில நின்னுக்கிட்டு மீன், நத்தையெல்லாம் கிடைக்காதான்னு அளைஞ்சுக்கிட்டு இருக்காங்க. எல்லாம் காலி. சின்னக் குழந்தைகள்லாம் கரையில உக்காந்து அழுதுக்கிட்டு இருக்காங்க. அதுங்க அழுகைய நிறுத்தறதுக்காக, அம்மாக்காரிங்கள்லாம் பச்சை நத்தையைப் பிடிச்சு அவங்க வாய்ல திணிச்சிட்டு, இன்னும் கிடைக்குமான்னு குளத்துக்குள்ள போறாங்க. அதையெல்லாம் சாப்பிட்டு எத்தனையோ குழந்தைங்க செத்துப் போய்டுச்சு.” பிரிட்டாஷாரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாபெரும் பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல். வங்க மூல நாவலான ‘ஆஷானி சங்கேத்' நூலிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவலில், பஞ்சம் எடுத்த எடுப்பிலேயே நம்மைப் பதறச் செய்யும் நோக்கத்தில் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, எளிமையான உரையாடல்கள் மூலமும், கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சொல்வது மூலமும் மெல்ல மெல்லப் பஞ்சம் அறிமுகமாகிறது. தெளிவான நீர் உள்ள குளம் ஒன்றில் மெல்ல மெல்லப் படரும் வெங்காயத் தாமரை போல. ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பஞ்சத்தின் தீவிரமும் நம்மை வந்தடையும்போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பதற்றம் ஏற்படுகிறது. இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களைத் தவிர, இம்மனிதர்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும், நாம் இங்கு வாழும் வாழ்க்கையை ஒத்ததுதான். அதனால் இந்நாவலை நம் ஊரில் நிகழும் ஒரு கதை என்ற அளவில் நம்மால் எளிதாக அணுக முடிகிறது. எழுத்தாளர் பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா எழுதி சேதுபதி அருணாசலம் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Durée: environ 4 heures (04:17:38) Date de publication: 31/05/2024; Unabridged; Copyright Year: — Copyright Statment: —