பிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran - சிறுகதைத் தொகுப்பு Short Story Collection
A. Muttulingam
Narrador Uma Maheswari
Editora: itsdiff Entertainment
Sinopse
தமிழின் முதன்மையான கதைசொல்லிகளுள் ஒருவர் அ. முத்துலிங்கம். இத்தொகுப்பிலுள்ள 18 சிறுகதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களிலிருந்து கலையம்சத்துடன் புனையப்பட்டவை. இவற்றை படைக்கும்போது தனக்கென ஆகிவந்த ஒரு சொல் முறையை கையாண்டு வாசகரை வசியம் செய்துவிடுகிறார். இந்த உத்தியை இவரளவு கடைபிடிப்பவர்கள் வேறு எவருமில்லை. அதனாலேயே பெரும்பாலும் சிறுபத்திரிகைகளில் தீவிரத் தன்மையுடன் எழுதிவந்த போதிலும் வெகுசன எழுத்தாளருக்குரிய புகழையும், வாசக அங்கீகாரத்தையும் இவர் பெற்றிருக்கிறார். அனைத்தும் 2012 பின்னால் எழுதியவை. பல்வேறு நிலப்பரப்புகள், மாறுபட்ட மனிதர்கள், பரிச்சயமற்ற கலாச்சாரச் சூழல்களினூடாக நிகழும் இவருடைய கதைகளின் ஆதாரமான உணர்வு அங்கதம். எனினும், அதனடியில் விலக்க முடியாத நிழல்போல மானிட உணர்வுகளின் ஏக்கமும் நெகிழ்வும் துயரமும் கண்ணீரும் அழியாத சித்திரங்களாய் விரவிக் கிடக்கின்றன. îஉலகத்து மேடையில் மனிதத் தொகையின் விநோதமான வாழ்வியல் சித்திரங்களால் நெய்த அழகிய கம்பளமாக இத்தொகுப்பை உருவகித்துக் கொள்ளலாம்
Duração: aproximadamente 7 horas (06:31:05) Data de publicação: 05/11/2022; Unabridged; Copyright Year: — Copyright Statment: —